இந்தியாவில் கொரோனா நோய் பரவல் குறித்து விஞ்ஞானிகள் ஆலோசனைக் கூட்டம் மூலம் கொரோனா இன்னும் ஒரு வாரத்திற்குள் உச்சம் தொடும் என்று தெரிவித்துள்ளனர்.
உலக நாடு முழுவதும் கடந்த ஒரு வருட காலத்திற்கு மேலாக கொரோனா நோய் பரவல் மக்களை பெரிதும் அச்சத்தில் மூழ்கியுள்ளது. சில மாதங்களாக இதனின் தாக்கம் குறைந்த நிலையில் மீண்டும் 2-வது அலையாக மின்னல் வேகத்தில் பரவி வருகின்றது. இதனைக் கட்டுப்படுத்த பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்ட நிலையிலும் அதனை கட்டுக்குள் கொண்டு வரமுடியவில்லை. நாளுக்கு நாள் இதனின் பாதிப்பு அதிகரித்துக்கொண்டே போகின்றது.
நாடு முழுவதும் நேற்று ஒரே நாளில் மட்டும் 3,86,452 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் இந்தியா முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 1கோடியே 87 லட்சத்து 62 ஆயிரத்து 976 ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் 31,70,228 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதனிடையே நாடு முழுவதும் கொரோனா பாதிப்பிலிருந்து இன்று வரை 1 கோடியே 53 லட்சத்து 84 ஆயிரத்து 418 பேர் குணம் அடைந்து வீடு திரும்பியுள்ளனர். இந்தியாவில் மட்டும் கொரோனா வைரசால் பலியானவர்களின் மொத்த எண்ணிக்கை இரண்டு லட்சத்து 8 ஆயிரத்து 330 ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை மூன்று லட்சத்திற்கும் அதிகமாக பதிவாகி உள்ளது. இதன் பரவலை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் பல்வேறு விதமான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு கடுமையான முயற்சிகள் மேற்கொண்டு வருகிறது.
இந்த நிலையில் இந்தியாவில் கொரோனா நோய் பாதிப்பு மே 5ஆம் தேதிக்குள் உச்சம் அடையும் என்று மத்திய அரசுக்கு கருத்துக்கணிப்பு வழங்கும் விஞ்ஞானிகள் குழு தெரிவித்துள்ளது. இதனால் பொதுமக்கள் அனைவரும் கொரோனா விழிப்புணர்வுடன் கட்டுப்பாடுகளை பின்பற்ற செயல்பட வேண்டும் என தெரிவித்துள்ளனர்.
இதுதொடர்பாக, விஞ்ஞானிகள் ஆலோசனைக் கூட்டம் ஒன்று நடத்தப்பட்டு அதில் கொரோனா வைரஸ் மே 5ஆம் தேதிக்குள் கொரோனா உச்சம் தொடும் என்று விஞ்ஞானிகள் கருத்துக் கணிப்பு தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக கொரோனா நோய் பரவல் குறித்து விஞ்ஞானிகளின் குழு தலைவர் வித்யாசாகர் மத்திய அரசிடம் இந்தியா முழுவதும் மே 5ஆம் தேதிக்குள் கொரோனா உச்சம் அடையும் என்று ஆலோசனை மூலம் தெரிவித்துள்ளனர்.