தமிழ்நாட்டில் நடந்துமுடிந்த சட்டமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் இரண்டு யுக்திகளை கையாண்டதாக கூறப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் அதிமுக மற்றும் திமுக போன்ற இரண்டு கட்சிகள் மட்டும் தான் மீண்டும் மீண்டும் ஆட்சியை கைப்பற்றும். இந்நிலையில் இம்முறை ஜெயலலிதா மற்றும் கருணாநிதி போன்ற இரண்டு முக்கிய தலைவர்களின்றி சட்டமன்ற தேர்தல் நடந்துள்ளது. இதனை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்டு பல்வேறு கட்சிகள் களமிறங்கியது.
எனினும் சீமான் மட்டும் தனியாளாக தேர்தலை சந்தித்தார். ஆனால் இந்த தேர்தலில் சீமான் 2 யுக்திகளை கையாண்டுள்ளார். அதில், ஒன்று தலித் வேட்பாளர்களை ஆதி தமிழர் என்ற பெயரில் நிறுத்தியது. அடுத்ததாக சசிகலாவை, ஜெயலலிதாவின் பிறந்தநாள் அன்று நேரில் சந்தித்தது. தற்போது அவையே அவருக்கு வாக்குகளாக கிடைத்திருக்கிறது.
தற்போது வெளியான Exit Poll ல் முன்பிருந்த தேர்தல்களை காட்டிலும் தென் மண்டலங்களில் நாம் தமிழர் கட்சிக்கு தான் அதிகமான வாக்குகள் கிடைக்கும் என்று கூறப்படுகிறது. இதற்கு காரணம் சசிகலாவுடன் நேரடி சந்திப்பு மற்றும் ஸ்டாலினை நேரடியாக தாக்கிய சீமானின் தைரியம் போன்றவை தான்.
இதனால் அதிகமான வாக்குகள் தென் மண்டலங்களில் நாம் தமிழர் கட்சிக்கு கிடைத்திருக்கிறதாம். மேலும் தென் மாவட்டங்களில் அதிமுகவின் வாக்குகளை தினகரன் பிரிப்பார் என்று கூறப்பட்டது. எனினும் நாம் தமிழர் கட்சிக்கு ஒரு சில இடங்களில் தினகரனைக் காட்டிலும் அதிகமான வாக்குகள் கிடைத்திருக்கிறதாம்.