Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

நிறைய தடவை சொல்லியும் செய்யல… ஜப்தி செய்யப்பட்ட பேருந்து… நீதிபதியின் அதிரடி உத்தரவு…!!

அரசு பேருந்து மோதி படுகாயம் அடைந்த ஒவருக்கு இழப்பீடு தொகை தராததால் அந்தப் பேருந்தை  ஜப்தி செய்ய மாவட்ட முதன்மை நீதிபதி  உத்தரவிட்டுள்ளார் .

அரியலூர் மாவட்டத்தில் உள்ள தத்தனூர் பகுதியில் சதீஷ்குமார் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். கடந்த 2013 ஆம் ஆண்டு சதீஷ்குமார் மோட்டார் சைக்கிளில் பொட்டக் கொல்லை பகுதியில் சென்று கொண்டிருந்தபோது அவ்வழியாக வந்த அரசு பேருந்து எதிர்பாராதவிதமாக அவரது மோட்டார் சைக்கிளில் மோதியுள்ளது. இந்த விபத்தில் சதீஷ்குமார் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். இது குறித்து சதீஷ்குமார் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். இந்த வழக்கை கடந்த 2014ம் ஆண்டு விசாரித்த நீதிபதி இந்த விபத்தில் காயமடைந்த சதீஷ்குமாருக்கு ரூபாய் 3 லட்சத்து 24 ஆயிரம் இழப்பீடு தொகை வழங்க வேண்டும் என்று போக்குவரத்துக் கழகத்திற்கு உத்தரவிட்டுள்ளது.

ஆனால் போக்குவரத்து கழகத்தினர் சதீஷ்குமாருக்கு இழப்பீடு தராமல் அவருக்குக் கொடுக்க வேண்டிய இழப்பீட்டுத் தொகையிலிருந்து ரூபாய் ஒரு லட்சத்து  முப்பதாயிரம் பணத்தை எடுத்து மேல்முறையீடு செய்வதற்கு  சென்னை உயர்நீதிமன்றத்திற்கு கட்டியுள்ளது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சதீஷ்குமாருக்கு ரூபாய் 2 லட்சத்து 62 ஆயிரத்து 753 இழப்பீட்டுத் தொகையை போக்குவரத்துக் கழகத்தினர் தர வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார். இதனையடுத்து சதீஷ்குமாருக்கு அரசு போக்குவரத்து கழகத்தின் சார்பில் எந்தவிதமான இழப்பீடு வழங்கப்படவில்லை. அதன்பின் இந்த வழக்கை விசாரித்த மாவட்ட முதன்மை நீதிமன்ற நீதிபதி சுமதி உடனடியாக விபத்தை ஏற்படுத்திய அரசு பேருந்தை ஜப்தி செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார். அந்த உத்தரவின் படி நீதிமன்றப் பணியாளர்கள் அந்த அரசு பேருந்து ஜப்தி செய்து நீதிமன்றத்திற்கு கொண்டு சென்றுள்ளனர்.

Categories

Tech |