உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு திமுக தலைவர் ஸ்டாலின் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். மே 1ம் தேதியான இன்று உழைப்பாளர் தினம் கொண்டாடப்படுகிறது. அதன்படி உழைப்பாளர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ள ஸ்டாலின், கொரோனா இரண்டாம் அலை கோர தாண்டவமாடும் சூழலில் உயிரை பணையம் வைத்து மக்களின் உயிர் காக்கப் போராடும் மருத்துவர்கள், செவிலியர்கள், தூய்மைப் பணியாளர்கள் உள்ளிட்ட முன் களப்பணியாளர்கள் ஒவ்வொருவருக்கும் என் உழைப்பாளர் தின வாழ்த்துக்கள். என்றைக்கும் இந்த சமூகம் உங்களுக்கு நன்றிக்கடன் பட்டிருக்கிறது என கூறியுள்ளார்.
Categories
உழைப்பாளர் தினம்…. தொழிலாளர்களுக்கு ஸ்டாலின் வாழ்த்து…..!!!!
