கொரோனா அச்சம் காரணமாக கடந்த ஆண்டு ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்ற நிலையில், நடப்பு ஆண்டுக்கான ஐபிஎல் தொடர் இந்தியாவில் நடந்து கொண்டிருக்கிறது. கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி போட்டிகள் நடந்து கொண்டிருக்கின்றன. அதில் பல தரப்பட்ட அணிகளும் விளையாடி வருகின்றன.
இந்நிலையில் ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் கேப்டன் பொறுப்பிலிருந்து டேவிட் வார்னர் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார். அவருக்கு பதில் நியூசிலாந்து வீரர் கேன் வில்லியம்சன் புதிய கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். நாளை ராஜஸ்தானுக்கு எதிரான போட்டியில் இருந்து கேன் வில்லியம்சன் கேப்டனாக செயல்பட உள்ளார்.