தமிழகம் முழுவதிலும் உள்ள 234 தொகுதிகளில் கடந்த ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடந்து முடிந்தது. அதில் பல வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இதனையடுத்து வாக்குபெட்டிகள் அனைத்தும் மூன்று அடுக்கு பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளது. மேலும் மே 2 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது.
இந்நிலையில் இன்று மே தினத்தை முன்னிட்டு அதிமுகவின் அண்ணா தொழிற்சங்க பேரவை உறுப்பினர்களாக உள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட நலிந்த தொழிலாளர்களுக்கு தலா ஒரு லட்சம் வீதம் குடும்பநல நிதி உதவி வழங்கப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதல்வர் பன்னீர்செல்வம் அறிவித்துள்ளனர். தற்போது தமிழக சட்டமன்ற தேர்தல் நடத்தை அமலில் இருப்பதால் நிதியுதவி வழங்கப்படும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என கூறியுள்ளனர்.