தமிழகத்தின் சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் நம்பிக்கை அளிக்கும் தகவல்கள் கிடைத்திருப்பதாக தெரிவித்துள்ளார்.
தமிழகத்தின் சட்டமன்ற தேர்தல் கடந்த மாதம் 6ஆம் தேதி நடந்து முடிந்தது. இதில் தேர்தலுக்கு முன்பும், பின்பும் நடத்தப்பட்ட கருத்துக் கணிப்புகளில் திமுக தான் வெற்றி பெறும் என்று கூறப்படுகிறது. எனவே திமுகவில் அமைச்சரவை பணிகள் நடைபெற தொடங்கியதாக கூறப்பட்டு வருகிறது.
இந்நிலையில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் இந்த தேர்தலுக்கு பின்பு, தன் தம்பிகள் என்று அவர் அழைக்கும் கட்சியை சேர்ந்த சில பேருக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில் நம்பிக்கை அளிக்கும் விதமாக பல்வேறு செய்திகள் நமக்கு கிடைத்திருக்கின்றன என்றும் தமிழகம் பெரும் மாற்றத்திற்கு தயாராகியுள்ளது என்று கூறியுள்ளார்.
பெண்களும், புதிய வாக்காளர்களும் மாற்று அரசியலின் மேல் நம்பிக்கை வைத்துள்ளார்கள். மேலும் படித்த இளைஞர்கள் என்று சமூகத்தில் நிறைய மக்களின் வாக்குகள் நமக்கு கிடைத்திருப்பதாக நம்பிக்கை தரும் தகவல்கள் தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறது. முன்பை விட மிகப்பெரிய வெற்றியை இந்த தேர்தலில் நாம் சந்திப்பது உறுதி என்று கூறியுள்ளார்.
சீமானின் இந்த நம்பிக்கைக்கு என்ன காரணம் என்றால், கிராமங்கள் மற்றும் நகரங்கள் என்று படித்த இளைஞர்களில் ஓரு ஐந்து பேரிடம் கேட்டால் கூட அதில் அதிகமானோர் சீமான் என்று தான் கூறுகின்றனர். இந்த அடிப்படையில்தான் சீமான் இவ்வாறு அறிக்கையை வெளியிட்டதாக கூறப்பட்டுள்ளது.
மேலும் சென்னையில் திராவிட கட்சிகள் அதிரும் அளவிற்கு நாம் தமிழர் கட்சி வாக்குகள் பெறும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. தென் மண்டலம் மற்றும் கொங்கு மண்டலம் என்று இளம் வயதினரின் அதிகப்படியான வாக்குககளை நாம் தமிழர் கட்சி தான் பெறும் என்று தெரியவந்திருக்கிறது.