அகமதாபாத்தில் நடைபெற்ற 25 வது லீக் போட்டியில், டெல்லி கேப்பிடல் – கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதிக் கொண்டன .
நேற்று முன்தினம் அகமதாபாத்தில் நடைபெற்ற 25 வது லீக் போட்டியில், டெல்லி கேப்பிடல் – கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின. இதில் முதலில் பேட்டிங் செய்த, கொல்கத்தா அணி 154 ரன்களை குவித்தது. அடுத்து களமிறங்கிய டெல்லி 155 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு விளையாடியது. தொடக்க வீரர்களான பிரித்வி ஷா – ஷிகர் தவான் அதிரடி ஆட்டத்தை காட்டினர். இதில் டெல்லி அணி முதல் விக்கெட்டுக்கு 132 ரன்கள் குவித்தது. இந்நிலையில் 12-வது ஓவரில் வருண் சக்கரவர்த்தி பவுலிங் செய்தார்.
அப்போது அவர் வீசிய 3வது பந்தை, ஷிகர் தவான் எதிர் கொள்ள , அந்தப் பந்து லெக் ஸ்டம்ப் பக்கம், வைடாக சென்ற பந்தை விக்கெட் கீப்பரான , தினேஷ் கார்த்திக் பிடித்தார் . பிடித்த பந்தை தினேஷ் கார்த்திக் ஸ்டம்பிங் செய்துவிட்டு ,அப்பீலை அம்பயரிடம் கேட்காமல், தவானை கிண்டல் செய்தார் . இதற்கு தவானும் பதில் அளிக்கும் வகையில் ,தினேஷ் கார்த்தியிடம் முட்டி போட்டு , வேண்டுவது போல நின்றார். இதனால் பரபரப்பான போட்டியில் வீரர்கள் , ஒருவரை ஒருவர் கிண்டல் செய்து கொண்ட வீடியோ மற்றும் புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.
https://twitter.com/CricketUnlimi/status/1387815893061619717