Categories
தேசிய செய்திகள்

இந்தியாவில் இந்த தேதிகளில் கொரோனா உச்சமடையும்.. விஞ்ஞானிகள் குழு எச்சரிக்கை..!!

இந்தியாவில் வரும் 3ஆம் தேதியிலிருந்து 5 ஆம் தேதி வரை கொரோனா தொற்று மேலும் தீவிரம் அடையும் என்று விஞ்ஞானிகள் குழு எச்சரித்துள்ளது. 

இந்தியாவில் கொரோனாவின் இரண்டாம் அலை உச்சத்தை அடைந்து வருகிறது. கடந்த 24 மணிநேரத்தில் 3.86 லட்சம் நபர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் மொத்தமாக தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை 1,87,62,976 ஆக உயர்ந்திருக்கிறது. இதில் சிகிச்சையில் இருப்பவர்கள் 31,70,228 நபர்களாவர்.

மேலும் பாதிப்பிலிருந்து பூரண குணமடைந்து தற்போது வரை 1,53,84, 418 பேர் வீடு திரும்பியுள்ளனர். மேலும் சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2,08,330 ஆக இருக்கிறது. இதனால் அனைத்து மாநிலங்களும் கொரோனாவை கட்டுப்படுத்த பல்வேறு கட்டுப்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் இந்தியாவில் தொற்று பாதிப்பு அடுத்த வாரத்தில் உச்சத்தை அடையும் என்று விஞ்ஞானிகள் குழு மத்திய அரசிடம் தெரிவித்துள்ளது. மேலும் மே 3-றிலிருந்து 5ம் தேதி வரை கொரோனா தீவிரமடையும் என்று கூறப்பட்டுள்ளது.

Categories

Tech |