Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

தொடரும் முன் விரோதம்… தகாத வார்த்தையால் திட்டிய வாலிபர்கள்… கைது செய்த காவல் துறையினர்…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் முன் விரோதத்தால் வாலிபரை தாக்கியவர்களை காவல் துறையினர் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள காமராஜபுரம் பகுதியில் சதீஷ்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அப்பகுதியை சேர்ந்த சிலருடன் முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இந்நிலையில் சதீஷ்குமார் பேரூராட்சி பகுதியில் நின்று கொண்டிருந்த போது அப்பகுதியைச் சேர்ந்த தமிழ்ச்செல்வன், செல்வா, ராம கிருஷ்ணன் ஆகிய 3 பேரும் சேர்ந்து சதிஷ்குமாரை தாக்கியுள்ளனர்.

இதனால் சதீஷ்குமார் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அந்த புகாரின் பேரில் காவல் துறையினர் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து  3 போரையும் கைது செய்துள்ளனர். இதனையடுத்து அவர்கள் 3 பேரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி நீதிபதி உத்தரவின் பேரில் திருமயம் கிளைச் சிறையில் அடைத்துள்ளனர்.

Categories

Tech |