Categories
சினிமா தமிழ் சினிமா

சிம்புக்கு கதை சொன்ன கே.வி…… உருக்கமாக சிம்பு இரங்கல்….!!!

பிரபல திரைப்பட இயக்குநரும் ஒளிப்பதிவாளருமான கே.வி.ஆனந்த் (54) நேற்று காலமானார். கொரோனா பாதிப்பால் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அங்கு அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். இவர் அயன், மாற்றான், கவன், காப்பான், கோ, அனேகன் உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ளார்.இவரது மறைவுக்கு திரைப் பிரபலங்கள் உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.

இந்நிலையில் கே.வி.ஆனந்த் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து நடிகர் சிம்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், அதிர்ந்து பேசாத நல்ல மனிதர் கே வி.ஆனந்த், சமீபத்தில் மிக அருமையான கதை ஒன்றை எனக்குச் சொல்லியிருந்தார். சேர்ந்து படம் பண்ணலாம் என சொல்லி இருந்தேன். தினமும் என்னோடு தொடர்பில் இருந்தார். நேற்றுவரை பேசிக்கொண்டிருந்த அவர் மரணம் அடைந்துவிட்டார் என்று சொல்வதை மனம் நம்ப மறுக்கிறது என தனது வேதனையை தெரிவித்துள்ளார்.

Categories

Tech |