Categories
அரசியல் கரூர் மாவட்ட செய்திகள்

”தண்ணீர் திறக்காவிட்டால் மறியல்” செந்தில் பாலாஜி எச்சரிக்கை …!!

அமராவதி ஆற்றில் தண்ணீர் திறக்காவிட்டால் 17ஆம் தேதி மறியல் நடைபெறும் என்று திமுக சட்டமன்ற உறுப்பினர் செந்தில் பாலாஜி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

தமிழகத்தில் சில வாரங்களாக குடிநீர் பஞ்சம் , தண்ணீர் தட்டுப்பாடு என்று பேசப்பட்டதுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக கேரளா ,கர்நாடகா , காவிரி நீர்பிடிப்பு பகுதியில் மழை பெய்து வருகின்றது. இதன் காரணமாக தமிழகத்தில் உள்ள அணைகள் அனைத்தும் வெகுவாக நிரம்பி வருகின்றது. அதே போல மேற்கு தொடர்ச்சி மலை பகுதியிலும் மழை பெய்து அணைகளின் நீர் வார்த்து அதிகரித்து வருவதால்  தண்ணீர் பஞ்சம் என்ற வார்த்தை  வெள்ளத்தில் மூழ்கியுள்ளது.

இந்நிலையில் கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி திமுக சட்டமன்ற உறுப்பினர் செந்தில் பாலாஜி கூறுகையில் ,அரவக்குறிச்சி , கரூர் , கிருஷ்ணராயபுரம் பகுதியில் கடுமையான குடிநீர் பிரச்சனை உள்ளது.அமராவதி ஆற்றில் தண்ணீர் திறக்காவிட்டால் 17ஆம் தேதி மறியல் நடைபெறும்.திறந்து விடும் தண்ணீர் கரூர் மாவட்டம் கடைமடை செல்லும் வரை திறக்க வேண்டும் என்று விடுகோள் விடுத்துள்ளார்.

Categories

Tech |