Categories
உலக செய்திகள்

மக்களே கவனமா கையாளுங்க..! கோழி இறைச்சியில் பரவும் கொடிய நோய்க்கிருமி… அதிகாரிகள் எச்சரிக்கை..!!

ஜெர்மன் அதிகாரிகள் கோழி இறைச்சியில் சால்மோனெல்லா என்னும் நோய்க்கிருமி பரவி வருவதால், கோழி மாமிசத்தை மக்கள் கவனமாக கையாள வேண்டும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

ஜெர்மனியில் ஆறு மாகாணங்களில் கோழி இறைச்சியைச் சாப்பிட்டு 20-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளதால் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். ஜெர்மனியில் கோழி இறைச்சியில் பரவும் சால்மோனெல்லா கிருமித்தொற்று குறித்து ராபர்ட் கோச் நிறுவனம் முதல் பெடரல் உணவு பாதுகாப்பு அலுவலகம் வரை தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இந்த நோய்க்கிருமி இறைச்சியை சரியான வெப்பநிலையில் வேகவைக்கும் போது கொல்லப்பட்டுவிடும். ஆனால் இறைச்சியை மசாலா பொருட்கள் சேர்ப்பதற்காக பாத்திரத்தில் வைக்கும்போதும், இறைச்சியை கழுவும் போதும் இந்த கிருமிகள் பாத்திரத்திலும், கைகளிலும் பரவ வாய்ப்புள்ளது.

மேலும் கைகள் மற்றும் பாத்திரங்களில் இருந்து அந்த கிருமி வேறு உணவுகளுக்கு பரவும் வாய்ப்பு உள்ளது. எனவே பச்சை இறைச்சியை மக்கள் மற்ற உணவு பொருட்களுடன் வைக்காமல் தனியாக சமைக்குமாறும், தனியாக சேமித்து வைக்குமாறும் அறிவுறுத்தப்படுகிறார்கள். அதோடு மட்டுமில்லாமல் மக்கள் இறைச்சியை கழுவியதற்கு பின்பு பாத்திரங்களையும், கைகளையும் வெதுவெதுப்பான நீர் மற்றும் சோப்பால் நன்றாக கழுவ வேண்டும் என்றும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

Categories

Tech |