ஸ்டெர்லைட் ஆலையை கண்காணிக்க மாவட்ட ஆட்சியர் தலைமையில் குழு அமைக்கப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதி அளித்திருப்பது தொடர்பாக தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. ஆக்சிஜன் உற்பத்திக்காக தற்காலிகமாக ஸ்டெர்லைட் ஆலைக்கு அனுமதி அளித்து அனைத்து கட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த தீர்மானத்தை பிரமாண பத்திரமாக உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு தாக்கல் செய்தது . ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தி செய்வதைக் கண்காணிக்க 5 பேர் கொண்ட குழுவை அமைக்கவும் உள்ளூர் நிர்வாகிகளும் இந்த குழுவில் இடம்பெறலாம் எனவும் நீதிபதிகள் பரிந்துரை செய்தனர்.
இந்த நிலையில் ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதி அளித்திருப்பது தொடர்பாக தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.அதில், ஸ்டெர்லைட் ஆலையின் செயல்பாடு தொடர்பாக இரண்டு வாரத்துக்கு ஒருமுறை அறிக்கை தர வேண்டும் என அந்த அரசாணையில் உத்தரவிட்டுள்ளது. மேலும், தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தியை கண்காணிக்க தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் தலைமையில் 7பேர் கொண்ட குழு அமைத்து உத்தரவிட்டுள்ளது.தூத்துக்குடி ஆட்சியர், துணை ஆட்சியர் , மாவட்ட காவல் கண்காணிப்பாளர், சார் ஆட்சியர், மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர், ஆக்ஸிஜன் தொழிற்சாலை குறித்த தொழில்நுட்ப அறிவு சார்ந்த அரசு அதிகாரி என 7 பேர் கொண்ட குழுவை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது…