Categories
உலக செய்திகள்

நான் சம்பாதிச்சத அவளுக்கு குடுக்கணுமா..! கணவன் செய்த கொடூரம்… அச்சத்தை ஏற்படுத்திய வழக்கு..!!

பிரித்தானியாவில் தான் சம்பாதித்த வீட்டை தனது மனைவிக்கு கொடுக்க விரும்பாத கணவர் தனது முன்னாள் மனைவியை அடித்து கொலை செய்த வழக்கில் தற்போது தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

இங்கிலாந்து நாட்டில் உள்ள லீமிங்டன் ஸ்பா என்னும் பகுதியில் வசித்து வந்த பால்லி என்ற பலவிந்தர் கஹிர்-ம், அவருடைய கணவரான ஜசபைந்தர் கஹிர்-ம் விவாகரத்து செய்து கொண்டு பிரிந்த நிலையில் தங்கள் வீடு யாருக்கு சொந்தம் என்பதில் தகராறு இருந்து வந்துள்ளது. மேலும் 480,000 பவுண்டுகள் மதிப்புடைய அந்த வீடு ஜசபைந்தர் கஹிர் சொந்தமாக சம்பாதித்தது என்பதால் அதை பால்லி-க்கு கொடுக்க மாட்டேன் என்று அவர் தனது பிள்ளைகளிடம் கூறியுள்ளார். மேலும் இதன் காரணமாக பால்லி-க்கும், ஜசபைந்தர்-க்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் பால்லி ஒருநாள் தனது வீட்டில் ரத்த வெள்ளத்தில் கிடந்துள்ளார். இதையடுத்து மருத்துவ குழுவினர் அங்கு வந்து பார்த்த போது பால்லி தாக்கப்பட்டதில் அவருடைய மண்டையோடு உடைந்தது தெரியவந்துள்ளது.

அதனால் அவரை மருத்துவர்களால் காப்பாற்ற முடியவில்லை. இதற்கிடையில் பால்லி-ன் முன்னாள் கணவரும், அவருடைய மகனான ரோஹன்-ம் சம்பவம் நடந்த அன்று பால்லி வீட்டிற்கு சற்று தொலைவில் கார் ஒன்றை நிறுத்திவிட்டு வீட்டிற்குள் சென்றதும் அதன்பின் அவர்கள் இருவரும் அங்கிருந்து சிறிது நேரத்தில் சென்றதும் சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. அதனை தொடர்ந்து ரோஹன்-ஐயும், அவரது தந்தை ஜசபைந்தர்-ஐயும் காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.

அந்த வழக்கில் தற்போது தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதில் சொத்துக்கு ஆசைப்பட்டு மனைவியை கொடூர கொலை செய்த ஜசபைந்தர்-க்கு நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்துள்ளது. மேலும் அவர் 28 ஆண்டுகளுக்கு வெளியே வர முடியாது. இந்த குற்றச்செயலுக்கு உடனிருந்த மகன் ரோஹன்-க்கு மூன்றரை ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. தனக்கு சொந்தமான வீடு தனது மனைவிக்கு போகக் கூடாது என்ற எண்ணத்தில் கணவரே, மனைவியை கொடூரமாக தாக்கி கொலை செய்ததும், அதற்கு மகன் துணை இருந்ததும் இந்த வழக்கில் அச்சத்தை ஏற்படுத்துவதாக உள்ளது.

Categories

Tech |