லண்டனில் நடன வகுப்பிற்கு சென்ற 11 வயது சிறுமியை பாலியல் ரீதியாக துன்புறுத்திய நபரின் புகைப்படங்கள் வெளியிடப்பட்டுள்ளது.
லண்டனில் உள்ள வெல்லிங் என்ற பகுதியில், 11 வயது சிறுமி ஒருவர் கடந்த 23ஆம் தேதியன்று மாலை சுமார் 4:20 மணிக்கு நடன வகுப்பிற்கு சென்றுள்ளார். அப்போது மர்ம நபர் ஒருவர் திடீரென்று அச்சிறுமியை பிடித்து இழுத்து கீழே தள்ளி கட்டியணைத்து முத்தமிட்டுள்ளார். இதில் சிறுமியின் கழுத்தில் கீறல் மற்றும் காயங்கள் ஏற்பட்டுள்ளது.
அதன் பிறகு அந்த சிறுமி போராடி அந்த நபரிடமிருந்து தப்பி அலறியடித்துக்கொண்டு வீட்டிற்கு ஓடியுள்ளார். அதன் பின்பு தன் தாயிடம் நடந்தவற்றை கூறியிருக்கிறார். இந்நிலையில் சிசிடிவி காட்சிகளை வைத்து அந்த நபரின் புகைப்படங்களை காவல்துறையினர் வெளியிட்டிருக்கின்றனர். மேலும் அந்த நபர் குறித்து விபரம் தெரிந்தவர்கள் தங்களிடம் உடனடியாக தெரிவிக்குமாறு காவல்துறையினர் கேட்டுள்ளனர்.