Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

மளமளவென பற்றி எரிந்த தீ… தீயணைப்பு வீரர்களின் போராட்டம்… அரியலூரில் பரபரப்பு.!!

தைலமரக் காட்டில் ஏற்பட்ட தீவிபத்தை பல மணி போராட்டத்திற்கு பிறகு தீயணைப்புத்துறையினர் கட்டுப்படுத்தி உள்ளனர்.  

அரியலூர் மாவட்டத்தில் உள்ள சின்னவளையம் பகுதியில் தைலமரக் காடு ஒன்று அமைந்துள்ளது. இந்தத் தைலமரக் காட்டில் இரவு நேரத்தில் திடீரென தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது. இந்நிலையில் அவ்வழியாக சென்ற பொதுமக்கள் தீ விபத்து குறித்து  தீயணைப்புத் துறையினருக்கு உடனடியாக தகவல் தெரிவித்துள்ளனர். இந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் தீயணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

ஆனால் அதற்குள் மரங்களில் பற்றி எரிந்த தீயானதுஅருகில் இருக்பரவ ஆரம்பித்து விட்டது . இதனையடுத்து பற்றி எரிந்த தீயை வெகு நேர போராட்டத்திற்குப் பிறகு தீயணைப்பு வீரர்கள் அணைத்துவிட்டனர். இதனால்அருகில் உள்ள வயலில் தீயானது முழுமையாக பரவாமல் தடுக்கப்பட்டுள்ளது. மேலும் இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் சிகரெட் குடித்துவிட்டு யாரேனும் அணைக்காமல் போட்டதால் இந்த தீ விபத்து ஏற்பட்டதா  அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என்ற விவரம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |