Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் பிளஸ் 2 மாணவர்களுக்கு…. இனி தினமும் தேர்வு…. அதிரடி அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டன. அதன் பிறகு எட்டு மாதங்கள் கழித்து கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில் 9 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப் பட்டது. ஆனால் சில பள்ளிகளில் மாணவர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதால், 9 முதல் 11 ஆம் வகுப்பு மாணவர்கள் தேர்ச்சி என அறிவிக்கப்பட்டு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமன்றி 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கும் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டு விடுமுறை அளிக்கப் பட்டுள்ளன.

இந்நிலையில் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள் வாயிலாக, அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கு அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கை, வீட்டில் இருக்கும் மாணவர்கள், பொதுத்தேர்வுக்கு சிறப்பாக தயாராகும் வகையில் அவர்களுக்கு ஆசிரியர்கள் பயிற்சி அளிக்க வேண்டும். பொதுத் தேர்வுக்கு தேவையான முக்கிய வினாக்கள் மற்றும் பாடங்களை மாணவர்களுக்கு எடுத்துரைத்து தேர்வில் அதிக மதிப்பெண் பெறும் வகையில் பயிற்சி அளிப்பது மிகவும் முக்கியம்.

ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பாடத்திலும் ஒரு அழகுக்கு வினா விடைகள் தேர்வு செய்து அதை தினசரி அழகு தேர்வாக நடத்த வேண்டும். இந்தத் தேர்வு வினாத்தாள் தினமும் முதன்மை கல்வி அலுவலகத்தில் இருந்து ஆசிரியர்களின் வாட்ஸ்அப் குரூப்பிற்கு அனுப்பப்படும். அவற்றை எடுத்து மாணவர்களுக்கு ஆன்லைனில் பகிர்ந்து தினமும் தேர்வு எழுத வைத்து விடைத்தாள்களை பெற வேண்டும். அதனை அன்றே திருத்தி மதிப்பெண் விவரத்தை மாணவர்களுக்கு அனுப்பி வைக்க வேண்டும். அதன் அடிப்படையில் மாணவர்கள் பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற முடியும்.

Categories

Tech |