பொதுவாக நாம் அன்றாடம் எடுத்துக்கொள்ளும் உணவுமுறைகளில் தான் நம்முடைய ஆரோக்யமும் இருக்கிறது. நாம் அவரது சத்தான உணவுகளை எடுத்துக்கொள்ள தவறும் பட்சத்தில் நோய்கள் நம்மை அண்டுகின்றன. எனவே தான் நம் மருந்துகளை தேடி அலைய வேண்டியதாக இருக்கிறது. அப்படி ஒரு சில தாவரவகைகள் சில நோய்களை தீர்க்க கூடியவையாக இருக்கின்றன.அந்தவகையில் நித்திய கல்யாணி செடி சில நோய்களை விரட்டும் குணம் கொண்டுள்ளது. அவை என்னவென்று பார்க்கலாம்.
ஐந்து நித்யகல்யாணி பூக்களை அரை லிட்டர் நீரில் போட்டு கால் லிட்டராக சுண்டக் காய்ச்சி வடிகட்டி அதை ஒரு நாளைக்கு 4 வேளை தினம் குடித்து வந்தால் அதிக தாகம், அதிக சிறுநீர் போக்கு மற்றும் அதனால் ஏற்படும் உடல் பலவீனம் ஆகியவை குணமாகும்.
நித்திய கல்யாணியின் வேர்ச் சூரணம் ஒரு சிட்டிகை எடுத்து வெந்நீரில் கலந்து சாப்பிட்டால் சிறுநீர் சர்க்கரை குறையும்.