Categories
உலக செய்திகள்

“நள்ளிரவில் வெடிகுண்டு மிரட்டல்!”.. பொதுமக்களை வெளியேற்றிய காவல்துறையினர்.. பிரிட்டனில் பரபரப்பு..!!

பிரிட்டனில் மர்மநபர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததால் அங்கிருந்த மக்களை உடனடியாக காவல்துறையினர் வெளியேற்றியுள்ளனர். 

பிரிட்டனிலுள்ள Old Trafford செஸ்டர் என்ற சாலையில் வெடிகுண்டு வைக்கப் போவதாக மிரட்டல் விடுக்கப்பட்டிருக்கிறது. இது தொடர்பாக காவல்துறையினர் தெரிவித்துள்ளதாவது, நேற்று இரவு 11:55 மணியளவில் Old Trafford செஸ்டர் சாலையில் குண்டு வைக்கப்போவதாக மர்மநபர் மிரட்டல் விடுத்ததாக தகவல் கிடைத்தது.

இதனைத்தொடர்ந்து அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று முன்னெச்சரிக்கையாக அங்கிருந்த மக்கள் அனைவரையும் குடியிருப்புகளிலிருந்து வெளியேற்றியுள்ளனர். இது தொடர்பில் 20 வயது இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். தற்போது அவரை காவலில் வைத்துள்ளனர்.

இதனைத்தொடர்ந்து அந்த சாலையில் அதிகாரிகள் சோதனையிட்டனர். அதன் பின்பு சந்தேகத்திற்குரிய பொருட்கள் சிலவற்றை கண்டுபிடித்துள்ளனர். மேலும் வெடிகுண்டு நிபுணர்கள் அந்த பொருட்களை ஆராய்ச்சி செய்வதற்காக சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்படவுள்ளனர்.

மேலும் தொடர்ந்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதனால் பொதுமக்களுக்கு ஆபத்து கிடையாது என உறுதிப்படுத்துவதற்காக காவல் துறையினரும், தீயணைப்பு துறையினரும் சேர்ந்து தீவிரமாக பணியாற்றி வருவதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

Categories

Tech |