அஜித் நடிப்பில் உருவாகவுள்ள தல 61 படத்தின் அப்டேட் வெளியாகியுள்ளது.
தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் அஜித்துக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர் . இவரது திரைப்படங்கள் தொடர்ந்து வசூலில் மிகப்பெரிய சாதனை படைத்து வருகிறது. கடைசியாக இவர் நடிப்பில் வெளியான நேர்கொண்டபார்வை, விஸ்வாசம் ஆகிய படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது . தற்போது நடிகர் அஜித் இயக்குனர் ஹெச்.வினோத் இயக்கத்தில் வலிமை படத்தில் நடித்து வருகிறார். வருகிற மே 1 ஆம் தேதி அஜித்தின் பிறந்த நாளில் வலிமை படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் கொரோனா இரண்டாவது அலை காரணமாக பர்ஸ்ட் லுக் ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டது .
இந்நிலையில் தல 61 படத்தின் செம மாஸ் அப்டேட் வெளியாகி அஜித் ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது. அதாவது 3-வது முறையாக அஜித்-ஹெச்.வினோத் கூட்டணி இணைய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது . இந்த படத்திற்காக நடிகர் அஜித் 65 நாட்கள் கால்சீட் கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது. விரைவில் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.