Categories
உலக செய்திகள்

எங்களால் இந்தியாவுக்கு உதவ முடியாது…. இது தான் காரணம்…. அறிவிப்பு வெளியிட்ட பிரிட்டன் பிரதமர்…!!

பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் பிரிட்டனின் நிலை குறித்து கூறி இந்தியாவுக்கு இப்போது எங்களால் உதவ முடியாது என தெரிவித்துள்ளார்.

கடந்த 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் சீனாவில் வுகான் நகரில் தோன்றிய கொரோனா வைரஸ் தொற்று உலக நாடு முழுவதிலும் பரவி ஏராளமான பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில் இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா கோரத்தாண்டவம் ஆடி வருகிறது. மேலும் ஒரு நாள் பாதிப்பு எண்ணிக்கை மூன்று லட்சத்திற்கும் அதிகமாக அதிகரித்து வருவதால் ஆக்சிஜன் தட்டுப்பாடு, மருந்து தட்டுப்பாடு போன்ற பல பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளன.

இந்நிலையில் இந்தியாவுக்கு ஐரோப்பிய நாடுகளை தொடர்ந்து பல நாடுகள் உதவி செய்து வருகின்றனர். இந்நிலையில் பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் பிரிட்டனின் நிலைகுறித்து அறிவிப்பு வெளியிட்டுள்ளார். அதில் பிப்ரவரி மாதம் தடுப்பூசிகள் இருந்ததை தொடர்ந்து மற்ற நாடுகளுக்கு அனுப்ப தயாராக உள்ளோம் என தெரிவித்திருந்தோம். ஆனால் தற்போது எங்கள் மக்களுக்கு தடுப்பு மருந்து அளிக்க வேண்டியுள்ளது. எனவே இப்போது இந்தியாவிற்கு பிரிட்டனால் உதவ முடியாது என தெரிவித்துள்ளார்.

Categories

Tech |