இலகுரக போர் விமானம் தேஜாஸ் பைத்தான்-5 ஏவுகணைகள் மூலம் இலக்குகளை துல்லியமாக தாக்கி சோதனையில் வெற்றி பெற்றுள்ளது.
பெங்களூருவில் அமைந்துள்ள இந்துஸ்தான் ஏரோநாட்டிகல் பொதுத்துறை நிறுவனம் உள்நாட்டிலேயே உருவாக்கிய இலகுரக போர் விமானம் தேஜாஸ். கடந்த பிப்ரவரி மாதம் மத்திய அரசு ரூபாய் 48 ஆயிரம் கோடி செலவில் இந்த வகை 89 விமானங்களை வாங்குவதற்கு ஒப்பந்தம் செய்திருந்தது. இந்நிலையில் ஐந்தாவது தலைமுறை பைத்தான்-5 வானிலிருந்து வானில் தாக்கும் ஏவுகணையை எடுத்துச் செல்வதற்குத் தேஜாஸ் போர் விமானங்களுக்கு நேற்று முன்தினம் அனுமதி அளிக்கப்பட்டது.
இதற்கான சோதனை கோவாவில் மிகவும் சவாலான சூழலில் நடத்தப்பட்டது. மேலும் தேஜாஸ் விமானத்தில் இருந்து செயல்பட்ட பைத்தான்-5 ஏவுகணைகள் வானிலிருந்து அதி வேகமாக நகர்ந்த இலக்குகளை 100% துள்ளியமாக தாக்கியுள்ளன. இந்த சோதனைக்கு முன்னால் ஏவுகணையை தேஜாஸ் போர் விமானத்தில் சுமந்து செல்வதற்கான தீவிர சோதனை பெங்களூருவில் நடத்தப்பட்டது. இந்த பைத்தான்-5 ஏவுகணையை எடுத்துச் செல்லும் தகுதியை பெற்றிருப்பது தேஜாஸ் விமானங்களின் ஆயுத திறனை வெகுவாக அதிகரிக்கிறது” என்று அதிகாரிகள் கூறியுள்ளனர்.