Categories
தேசிய செய்திகள்

ஸ்டார் ஓட்டலில் தங்கிவிட்டு, பாதி பில்லை கட்டாமல் ஓட்டம் பிடித்த தொழிலதிபர்…!!!

ஸ்டார் ஓட்டலில் தங்கிவிட்டு, பாதி பில்லை கட்டாமல் ஓட்டம் பிடித்த தொழிலதிபரை போலீசார் தேடி வருகின்றனர்.

 

ஐதராபாத்தில் பஞ்சாரா ஹில்ஸ் பகுதியில் உள்ள தாஜ் பஞ்சாரா நட்சத்திர ஓட்டலில் சங்கர் நாராயணன் என்ற தொழிலதிபர் 102 நாட்கள் தங்கியுள்ளார். ரூம்  வாடகை  ரூபாய் 25.96 லட்சம் வந்த நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் 13.62 லட்சத்தை கட்டியுள்ளார். மேலும் மீதி பணத்தை சிறிது நாள் கழித்து தருவதாக கூறியுள்ளார்.

Image result for ஸ்டார் ஹோட்டல்

ஒரு நாள் சங்கர் நாராயணன் யாருக்கும் தெரியாமல் ஓட்டலில் இருந்து  எஸ்கேப்  ஆகியுள்ளார். ஓட்டல் நிர்வாகம் சங்கர் நாராயணனை காணவில்லை என்றதும்,  அவருக்கு போன் மூலம் தொடர்பு கொண்டுள்ளனர். ஆனால் போன் ஸ்விச்ஆப் செய்யப்பட்டிருந்ததால் அவர் ஏமாற்றி விட்டார் என்பது தெரிய வந்தது. இது குறித்து உடனடியாக போலீசாரிடம் புகார் அளித்தனர்.மேலும் வழக்கு பதிவு செய்த போலீசார், தப்பி ஓடிய சங்கர் நாராயணனை தீவிரமாக தேடி வருகின்றனர்.

Categories

Tech |