கொரோனா தொற்றால் அவதிப்பட்டு வரும் இந்தியாவுக்கு, சுவிட்சர்லாந்து உடனடியாக உதவிகளை அனுப்ப தயாராக உள்ளதாக தெரிவித்துள்ளது.
இந்தியாவில் புதிதாக கொரோனாவால் நாள் ஒன்றுக்கு 300,000 பேர் வரை பாதிக்கப்படுகின்றனர். மேலும் கொரோனா தொற்றால் 200,000 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த நிலையில் ஐரோப்பிய ஒன்றியம், பிரித்தானியா மற்றும் அமெரிக்கா என பல நாடுகளிலிருந்து ஆக்சிஜன், மருத்துவ உபகரணங்கள் மற்றும் தடுப்பூசி என வழங்கி இந்தியாவிற்கு உதவுவதற்கு முன் வந்துள்ள நிலையில் தற்போது இந்தியாவிற்கு சுவிட்சர்லாந்து உதவி செய்ய முன்வந்துள்ளது. சுவிட்சர்லாந்தின் வெளியுறவு அமைச்சரான இஞஜிவ் காசிஸ் இந்தியாவுக்கு ஒரு மில்லியன் ஃப்ராங்குகள் மதிப்பிலான பொருள்கள் உடனடியாக அனுப்பப்பட உள்ளதாக தெரிவித்துள்ளார்.