கேரள இளைஞர் ஒருவர் துபாயில் வேலையின்றி தவித்த சமயத்தில் லாட்டரி குலுக்கலில் அவருக்கு 3,00000 திர்ஹாம் பரிசுத்தொகை கிடைத்துள்ளது.
கேரள மாநிலத்தில் வசிக்கும் Afsal Khalid என்பவர் ஐக்கிய அரபு அமீரகத்தில் பணிபுரிந்திருக்கிறார். அதன் பின்பு, கடந்த ஒரு வருடமாக அவர் வேலையின்றி தவித்து வந்துள்ளார். இதனால் சொந்த ஊருக்கே திரும்பிவிட்டார். அப்போது தான் அவருக்கு அதிர்ஷ்டம் அடித்துள்ளது. அதாவது துபாயில் ஒவ்வொரு வாரமும் நடத்தப்படும் Mahzooz என்ற டிஜிட்டல் குலுக்கலில் Afsal Khalid பெயரும் இடம்பெற்றிருக்கிறது.
இதனால் அவருக்கு 3 லட்சம் திர்ஹாம் கிடைத்துள்ளது. இதைப்பற்றி Afsal Khalid கூறியுள்ளதாவது, ரம்ஜான் பரிசாக இது கிடைத்துள்ளது என்று தான் கருதுகிறேன். கடவுள் ஆசிர்வாதம் என்று எண்ணுகிறேன். கடந்த ஒரு ஆண்டாக பணியில்லாமல் இருந்தபோது மனதளவில் மிகுந்த வேதனையடைந்தேன்.
அந்த தருணத்தில், கடவுளை மட்டும் தான் நம்பினேன். இப்போது இவ்வளவு பெரிய அதிஷ்டம் கிடைத்திருக்கிறது. கடந்த சனிக்கிழமை அன்று தான் இந்த டிஜிட்டல் குலுக்கல். எனவே மின்னஞ்சலை சரி பார்த்தேன். அப்போது 3,33,333 திர்ஹாம் பரிசு விழுந்ததாக குறிப்பிடப்பட்டிருந்தததை பார்த்தவுடன் என்னால் நம்ப முடியவில்லை.
அன்று இரவு நான் தூங்கவே இல்லை. அடுத்த நாள் காலையில் அந்த நிறுவனத்தினுடைய அதிகாரிகள் அழைப்பார்களா? என்று காத்திருந்தேன். அதன் பிறகு அந்தத்தொகை உறுதி செய்யப்பட்டது. இதனைவைத்து முதலில் தொண்டு நிறுவனங்களுக்கு உதவபோகிறேன். இதன் மூலம் கடவுளுக்கு நான் நன்றி கூறுவதாக இருக்கும். மீதி பணத்தில் சிறிய தொழில் ஒன்றை தொடங்கி குடும்பத்துடன் இங்கேயே வசிக்க போகிறேன் என்று தெரிவித்துள்ளார்.