கொரோனா தடுப்பூசிக்கு பதிலாக வாய்வழி உட்கொள்ளும் மருந்தை கண்டுபிடிக்க உள்ளதாக பைசர் நிறுவனம் நம்பிக்கையூட்டும் புதிய தகவலை வெளியிட்டுள்ளது.
கொரோனாவின் இரண்டாவது அலை தீவிரமாக பரவி வரும் நிலையில் தடுப்பூசி போட்டுக் கொள்வதற்கு மக்கள் தொடர்ந்து ஆர்வம் காட்டி வருகின்றனர். மேலும் இந்த நோய் தோற்றால் 14 கோடிக்கு மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதிலும் 30 லட்சத்திற்கும் அதிகமானோர் தொற்றால் உயிரிழந்துள்ளனர். இது உச்சத்தில் சென்று கொண்டிருக்கும் நேரத்தில் மத்திய மாநில அரசுகள் தொடர்ந்து பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது.
மேலும் ஆக்சிஜன் தட்டுப்பாட்டால் மக்கள் இறக்க நேரிடுவதால் ஆக்சிஜன் உற்பத்தி மற்றும் விநியோக பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. மேலும் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டதால் உயிர்பலி எண்ணிக்கையும் குறையும் என்பதாலும் மக்கள் தடுப்பூசி போடுவதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். மேலும் கொரோனா நோய்த்தொற்றில் இருந்து தப்பிப்பதற்கு ஒரே வழி தடுப்பூசி போட்டுக் கொள்வது தான் என்று மக்கள் நினைத்திருந்த வேளையில் தற்போது ஒரு மாற்று வழி கிடைத்துள்ளது.
அது என்னவென்றால் வாய்வழி மருந்து உட்கொள்வது ஆகும். இதை பிரபல மருந்து தயாரிப்பு நிறுவனமான பைசர் நிறுவனம்தான் தயாரிக்க உள்ளது. அதற்கான முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டும் வருகின்றது. இந்த தகவலை அந்த நிறுவனத்தின் இயக்குனர் ஆல்பர்ட் போரில் அமெரிக்கப் பத்திரிகை ஒன்றுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.
அதில் அவர் கூறியதாவது “மருந்து கட்டுப்பாட்டாளரின் அனுமதி உள்ளிட்ட எல்லா விஷயங்களும் சரியான முறையில் நடந்தால் இந்த ஆண்டின் இறுதிக்குள் வாய்வழி உட்கொள்ளும் மருந்து பயன்பாட்டிற்கு வரும் என நம்புகிறேன்” என கூறியுள்ளார். மேலும் வாய் வழியாக உட்கொள்ளும் இந்த மருந்து பயன்பாட்டிற்கு வந்தால் மக்கள் தங்கள் வீடுகளுக்கு எடுத்துச்சென்று உட்கொள்ளலாம் எனவும் கூறப்பட்டுள்ளது.