Categories
தேசிய செய்திகள்

வேகமெடுக்கும் கொரோனா…. 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு முன்பதிவு ஆரம்பம்…. மே 1 முதல் செயல்படுத்த முடிவு….!!

18 வயதிற்கு மேற்பட்டோர் அனைவரும் மே 1 ஆம் தேதி முதல் தடுப்பூசி செலுத்தி கொள்ளலாம் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

இந்தியாவில் கொரோனாவின் இரண்டாவது அலை வேகமாக பரவிக் கொண்டிருக்கும் நிலையில் 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்துவதற்கு அனுமதிக்க வேண்டும் என மத்திய அரசுக்கு பெரும்பாலான மாநிலங்களில் இருந்து கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதனை தன் கவனத்திற்கு கொண்டு வந்த மத்திய அரசு 18 வயதிற்கு மேற்பட்டவர்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

அதன்படி மே 1 ஆம் தேதியிலிருந்து தடுப்பூசி செலுத்தப்படும் எனவும் அதற்காக அரசின் இணையதளத்தில் முன்பதிவு செய்ய வேண்டும் எனவும் அரசு தெரிவித்திருந்தது. அதன்படி CoWIN.gov.in என்ற இணையதளம் மூலம் பொதுமக்கள் நேற்று மாலை 4 மணியிலிருந்து தடுப்பூசி போடுவதற்கு முன்பதிவு செய்து வருகின்றனர்.

இந்த முன்பதிவிற்கு முதலில் அதிகமானோர் தொடர்ந்து ஒரே நேரத்தில் இணையதளத்தில் நுழைந்ததால் அது வேலை செய்யவில்லை. அதன்பின் தொடர்ந்து முயற்சித்தபோது வேலை செய்ய தொடங்கியது. மேலும் முன்பதிவு தொடங்கிய சில நிமிடங்களிலேயே 27 லட்சம் பேர் பதிவு செய்துள்ளனர். இந்நிலையில் 4 மணி முதல் இரவு 7 மணி வரை 80 லட்சம் பேர் பதிவு செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |