கொரோனாவில் இருந்து மீண்டு வந்த தம்பதியை பார்க்கும்போது அனைவருக்கும் நம்பிக்கை அளிக்கும் வகையில் உள்ளது.
இந்தியாவின் கொரோனாவின் இரண்டாவது அலை வேகமாக பரவிக்கொண்டிருக்கிறது. மேலும் நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரித்துக் கொண்டே வருகின்றது. ஆனால் குணமடைவோரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருவது சிறிது நம்பிக்கையை ஏற்படுத்துகிறது. இந்நிலையில் மராட்டிய மாநிலம் லட்டூர் மாவட்டம் கட்ஹான் தண்டா கிராமத்தில் தெஹ்னு சவான் என்ற 105 வயதுள்ள முதியவரும் அவரது மனைவி மோடாபாய் 93 வயதுள்ள மூதாட்டியும் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
இதனால் இவர்கள் இருவரும் லட்டூர் மாவட்டத்தில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் அங்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு ஆக்சிஜன் உதவியுடன் சிகிச்சை பெற்று வந்தனர். இந்நிலையில் ஒன்பது நாட்கள் தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த அவர்கள் தற்போது நலம் பெற்று வீடு திரும்பியுள்ளனர். மேலும் 105 வயது முதியவரும் 93 வயதுள்ள அவருடைய மனைவியும் குணமடைந்து வீடு திரும்பியுள்ள சம்பவத்தை கேட்கும்போது அனைவருக்கும் நம்பிக்கை அளிக்கும் வகையில் உள்ளது