Categories
தேசிய செய்திகள்

தொற்றிலிருந்து தப்பிக்க முயற்சி…. துபாய்க்கு பறக்க அவசரம்…. தாறுமாறாக உயர்ந்த கட்டணம்….!!

10 நாட்கள் இந்தியாவுக்கான விமான தடையானது நடைமுறைக்கு வந்து ஞாயிற்றுக்கிழமையில் இருந்து டிக்கெட் எதுவும் வழங்கப்படவில்லை.

இந்தியாவில் கொரோனாவின் இரண்டாவது அலை வேகமாக பரவிக் கொண்டிருக்கின்றது. இந்நிலையில் இந்தியாவுடனான விமான போக்குவரத்தை பல்வேறு நாடுகள் தடை செய்துள்ளது. அதிலும் குறிப்பாக ஐக்கிய அரபு அமீரகம் இந்தியா இடையேயான வழித்தடத்தில் விமான சேவைகள் அனைத்தும் ஞாயிற்றுக்கிழமை முதலிலிருந்தே நிறுத்தி வைத்துள்ளது. அதனால் அமீரகம் செல்ல திட்டமிட்டிருந்த பயணிகள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

இந்த கொரோனா பாதிப்பில் இருந்து தப்பிப்பதற்காக ஞாயிற்றுக் கிழமைக்கு முன்னரே இந்தியாவிலிருந்து சென்று விட்டனர். ஆனால் சிலர் அமீரகம் செல்வதற்காக விமான நிறுவனங்களை அணுகியபோது அவர்களுக்கு மேலும் ஒரு அதிர்ச்சி காத்திருந்தது. அது என்னவென்றால் தனியார் நிறுவனங்களுக்கு கடும் கிராக்கி ஏற்பட்டு விட்டது. அந்த நிறுவனங்கள் அனைத்தும் டிக்கெட் கட்டணத்தை தாறுமாறாக உயர்த்தியுள்ளன.

மேலும் வசதிகள் படைத்தவர்கள் இந்த பணத்தை கொடுத்து அமீரகத்திற்கு பறந்து சென்று விட்டனர். ஆனால் பணம் இல்லாதவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி வந்துள்ளனர். இந்த டிக்கெட் கட்டணத்தை ஒப்பிட்டுப் பார்க்கும் போது மும்பையில் இருந்து துபாய்க்கு வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் ஒருவழிப்பாதை டிக்கெட் கட்டணம் ரூபாய் 80,000 வரை நிர்ணயிக்கப்பட்டது.

இது வழக்கமான கட்டணத்தை விட 10 மடங்கு அதிகமாகும். அதேபோல் டெல்லி துபாய் வழித்தடத்தில் டிக்கெட்டுகள் 50,000 ரூபாயாக இருந்தது. இது சாதாரண நாட்களில் உள்ள கட்டணத்தை விட ஐந்து மடங்கு அதிகமாகும். மேலும் ஐக்கிய அமீரகத்தில் சுமார் 33 இலட்சம் இந்தியர்கள் வாழ்கின்றனர். இது அந்த நாட்டின் ஒட்டு மொத்த மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பங்கு ஆகும்.

Categories

Tech |