இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 2 லட்சத்தை தாண்டியது என சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் கொரோனாவின் இரண்டாவது அலை வேகமாக பரவிக்கொண்டிருக்கிறது. இந்நிலையில் கடந்த ஆண்டு தொற்று பரவ ஆரம்பித்ததிலிருந்து செவ்வாய்க்கிழமை வரை கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 2,01,187 உயர்ந்துள்ளது என சுகாதாரத்துறை அமைச்சகம் இன்று அறிவித்தது. மேலும் நேற்று ஒரே நாளில் மட்டும் கொரோனா தொற்றால் 3,293 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவே இறப்பு எண்ணிக்கையில் உச்சகட்டம் ஆகும்.
அதேபோல் நேற்று ஒரு நாளில் மட்டும் புதிதாக 3,60,960 கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் இந்தியாவின் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 17,19,97,267 ஆக அதிகரித்துள்ளது. அதே சமயத்தில் குணமடைந்தவரின் விகிதம் 82.33 சதவீதமாகக் குறைந்துள்ளது. அதேபோல் இந்திய நாட்டில் இதுவரை 28,27,03,789 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.