Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் உதவி பேராசிரியர்களுக்கு…. 5 ஆண்டுகள் பணி நீட்டிப்பு….!!!!

தமிழகத்தில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டன. அதன் பிறகு எட்டு மாதங்கள் கழித்து கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில் 9 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டது. பெருபாலும் கல்லூரிகளும் திறக்கப்பட்டன. ஆனால் சில பள்ளிகளில் மாணவர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதால், 9 முதல் 11 ஆம் வகுப்பு மாணவர்கள் தேர்ச்சி என அறிவிக்கப்பட்டு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமன்றி 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கும் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டு விடுமுறை அளிக்கப் பட்டுள்ளன.

அதுமட்டுமன்றி கொரோனா பாதிப்பு காரணமாக கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழகம் முழுவதும் உள்ள அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் தற்காலிகமாக பணியாற்றும் 123 உதவி பேராசிரியர்களுக்கு, 2026 ஆம் ஆண்டு வரை ஐந்து ஆண்டுகளுக்கு பணி நீட்டிப்பு வழங்க தமிழக அரசுக்கு, கல்லூரி கல்வி இயக்ககம் பரிந்துரை செய்துள்ளது. பணி நீட்டிப்பு குறித்த அரசாணையை விரைவில் தமிழக அரசு வெளியிடும் என்று தகவல் வெளியாகியுள்ளது.

Categories

Tech |