Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

“கொரோனா சிகிச்சை மையம்” எல்லா ஏற்பாடும் சரியா இருக்கா… ஆய்வு மேற்கொண்ட அதிகாரி…!!

வாணியம்பாடி கொரோனா சிகிச்சை மையத்தில் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டுள்ளனர்.

திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள வாணியம்பாடி இசுலாமிய திறன் வளர்ச்சி மேம்பாட்டு மைய வளாகத்தில் கொரோனா சிகிச்சை மையம் செயல்பட்டு வருகின்றது. இந்நிலையில் கொரோனா சிகிச்சை மையத்தை ஊரக வளர்ச்சி திட்ட இயக்குனர் மகேஷ் பாபு நேரில் சென்று ஆய்வு செய்துள்ளார். அப்போது கொரோனா சிகிச்சை மையம் செயல்படும் விதம் பற்றியும், நோயாளிகளுக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சை பற்றியும் மருத்துவரிடம் கேட்டறிந்துள்ளார்.

இதனையடுத்து கொரோனா சிகிச்சை மையத்திற்கு தேவையான உதவிகள் செய்து தரப்படும் என மகேஷ்பாபு உறுதியளித்துள்ளார். இந்த ஆய்வின்போது ஊரக வளர்ச்சி உதவி இயக்குனர் அருண், வட்டார மருத்துவ அலுவலர் பசுபதி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் விநாயகம், மணவாளன், மருத்துவ அலுவலர்கள் மற்றும் சுகாதார பணியாளர்கள் போன்றோர் அவருடன் இருந்தனர்.

Categories

Tech |