Categories
சினிமா தமிழ் சினிமா

யோகி பாபுவுக்கு அஜித் சொன்ன அட்வைஸ்…. அவரே அளித்த விளக்கம்….!!!

காமெடி நடிகர் யோகிபாபுவிற்கு நடிகர் அஜித் அறிவுரை கூறியுள்ளார்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அஜித். இவரது நடிப்பில் வலிமை எனும் திரைப்படம் உருவாகி வருகிறது. இதேபோல் முன்னணி நகைச்சுவை நடிகராக வலம் வருபவர் யோகி பாபு. நடிகர் யோகிபாபு சமீபத்தில் அளித்த பேட்டியில் அஜித் பற்றி கூறியுள்ளார். அப்போது அவர் கூறியதாவது, “நடிகர் அஜித்துடன் இணைந்து வீரம், வேதாளம், விஸ்வாசம் ஆகிய படங்கள் நடித்துள்ளேன்.

தற்போது நான்காவது முறையாக அவருடன் இணைந்து வலிமை படத்திலும் நடித்து வருகிறேன். அவருடன் பணியாற்றிய மூன்று படங்களின் போதும் அவர் என்னை பார்த்து ஏன் இன்னும் பொண்ணு பாக்கல, கல்யாணம் பண்ணலன்னு கேட்டுக்கொண்டே இருப்பார்.

நான் பொண்ணு பாக்குறேன். என்னதா பொண்ணு பாக்க மாட்டேங்குது சார்ன்னு சொல்லுவேன். அதற்கு அவர், உனக்கு சீக்கிரம் கல்யாணம் ஆகிடும்னு சொன்னாரு. இப்போ வலிமை பட சூட்டிங்கில் என்ன பார்த்து சந்தோஷமாக கட்டிப்பிடிச்சு குடும்பம் தான் முக்கியம் என்று அறிவுரை சொன்னார்” என்று கூறியுள்ளார்.

Categories

Tech |