Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு… திருக்கல்யாண சிறப்பு உற்சவம்… பக்தர்கள் தரிசனம்..!!

பெரம்பலூர் சொக்கநாதர் கோவிலில் சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு மீனாட்சி அம்மனுக்கு திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது.

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள புறநகர் துறைமங்கலத்தில் சிறப்பு வாய்ந்த சொக்கநாதர் உடனுறை மீனாட்சி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் சித்திரா பவுர்ணமியை முன்னிட்டு திருக்கல்யாண சிறப்பு உற்சவம் நடைபெற்றது. திருகல்யாணத்தை முன்னிட்டு சுவாமிகளுக்கு சிறப்பு அலங்காரம், அபிஷேகம் மற்றும் தீபாராதனை செய்யப்பட்டு அதன் பின் திருக்கல்யாணம் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் பக்தர்கள் சமூக இடைவெளியை கடைபிடித்து, முககவசம் அணிந்து கோவிலுக்கு வெளியே நின்று சாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை ருத்ரா அறக்கட்டளை பொறுப்பாளர்கள், கோவில் பிரதோஷ வழிபாட்டுக்குழுவினர் மற்றும் பக்தர்கள் செய்திருந்தனர்.

Categories

Tech |