Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

நல்லுணர்வுடன் தொடங்கப்பட்ட அமைப்பு… ராணுவ வீரர்கள்… ரத்த தானம் நிகழ்ச்சி..!!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள மானாமதுரையில் வைகை பட்டாளம் என்ற அமைப்பின் மூலம் 15 ராணுவ வீரர்கள் ரத்ததானம் வழங்கினர்.

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள மானாமதுரையில் வைகை பட்டாளம் என்ற அமைப்பை ராணுவ வீரர்கள் ஒன்று சேர்ந்து உருவாக்கி அதன் மூலம் நலத்திட்ட உதவிகளை செய்து வருகின்றனர். தற்போது நிலவி வரும் கொரோனா காலத்தில் ஏழ்மையில் இருப்பவர்களுக்கு சர்க்கஸ் கலைஞர்கள் நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.

அந்த அமைப்பின் மூலம் இளையான்குடி பகுதியை சேர்ந்த ஏழை, எளிய மக்கள் பயன்பெறும் வகையில் முதலாம் ஆண்டை முன்னிட்டு மூன்று பேருக்கு இலவச தையல் எந்திரங்கள் வழங்கினர். அதன்பின் மானாமதுரையில் நடத்தப்பட்ட நிகழ்ச்சியில் 15 ராணுவ வீரர்கள் ரத்த தானம் வழங்கினர்.

Categories

Tech |