ஏபி டிவில்லியர்ஸின் அதிரடி ஆட்டத்தால் , ஆர்சிபி அணி 171 ரன்களை குவித்துள்ளது .
2021 ம் ஆண்டிற்கான ஐ.பி.எல் தொடரின் , 22 வது லீக் போட்டியில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்- டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் மோதுகின்றன . இந்த போட்டி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில், நடக்கிறது . இதில் டாஸ் வென்ற டெல்லி அணி , பீல்டிங்கை தேர்வு செய்தது .இதனால் ஆர்சிபி அணி பேட்டிங்கில் களமிறங்கியது .தொடக்க வீரர்களாக விராட் கோலி- தேவ்தத் படிக்கல் களமிறங்கினர் . இதில் விராட் கோலி 12 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க ,அடுத்து படிக்கல் 17 ரன்களில் வெளியேறினார் .அடுத்து களமிறங்கிய படித்தார் – மேஸ்க்வெல் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர் .
இதில் மேஸ்க்வெல் 25 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க ,அடுத்து படித்தார் 31 ரன்கள்,வாஷிங்டன் சுந்தர் 6 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர் .அடுத்து களமிறங்கிய ஏபி டி வில்லியர்ஸ் அதிரடி ஆட்டத்தை காட்டினார். இவர் 42 பந்துகளில் 5 சிக்சர் , 3 பவுண்டரிகளை அடித்து விளாசினார். இறுதி வரை ஆட்டமிழக்காமல் 75 ரன்களை குவித்தார். இறுதியில் ஆர்சிபி அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழந்து 171 ரன்களை குவித்துள்ளது. அடுத்து களமிறங்கி உள்ள டெல்லி அணி 172 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு விளையாடுகிறது.