Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

கலப்படமானவை சந்தைகளில் புழக்கமா…? வசமாக சிக்கியவர்கள்… விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்…!!

கலப்பட சிமெண்ட் தயாரித்து சந்தைகளில் புழக்கத்தில் விட்ட இரண்டு பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள சோழவரம் காவல் துறையினருக்கு செங்காளம்மன் நகரில் இருக்கும் தனியாருக்கு சொந்தமான கிடங்கில் கலப்பட சிமெண்ட் தயாரிக்கப்படுவதாக ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி சோழவரம் காவல் துறையினர் அப்பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த போது, சிலர் கலப்பட சிமெண்ட் மூட்டைகளை லாரியில் ஏற்றி கொண்டிருந்தனர். அவர்கள் காவல்துறையினரை கண்டதும் தப்பி ஓட முயற்சி செய்துள்ளனர். ஆனால் அவர்களைப் மடக்கிப் பிடித்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில் கலப்பட சிமெண்ட் தயாரித்து சந்தைகளில் புழக்கத்தில் விட்டது தெரிய வந்துள்ளது.

இதனையடுத்து காவல்துறையினர் கலப்படம் செய்ய பயன்படுத்தப்பட்ட மூலப்பொருட்கள், சிமெண்ட் கலவை இயந்திரம், சிமெண்ட் மூட்டைகள் மற்றும் இரண்டு லாரி போன்றவற்றை பறிமுதல் செய்தனர். அதன்பின் குடோனில் கலப்பட சிமெண்ட் தயார் செய்த குற்றத்திற்காக தண்டையார்பேட்டை பகுதியில் வசித்து வரும் நாசர், சுகுமார் ஆகிய இருவரை கைது செய்துள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |