Categories
Uncategorized மாநில செய்திகள்

அடக்கம் செய்ய இடமில்லை…. உடல்களுடன் வீட்டில் இருக்கும் உறவினர்கள்…. வெளியானது அதிர்ச்சி தகவல்….!!

கொரோனாவால் இறந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்ய இடமில்லாமல் உடல்களுடன் உறவினர்கள் வீட்டில் இருப்பதாக அதிர்ச்சி தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

இந்தியாவில் டெல்லியில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து கொண்டே வருகிறது. இதனால் மருத்துவமனைகள் முழுவதும் மரண ஓலம் எழுந்துள்ளது. மேலும் ஆக்சிஜன் பற்றாக்குறையால் உயிரிழப்புகள் அடுத்தடுத்து நிகழ்ந்து கொண்டே இருக்கிறது. சுமார் 300 பேர் நாளொன்றுக்கு இறப்பதால் அவர்களின் உடல்களை தகனம் செய்வதற்கு கூட இடமில்லாமல் மயானத்திற்கு வெளியே உடல்களை நீண்ட வரிசையில் வைக்கப்பட்டு அதற்கு அருகில் உறவினர்கள் காத்து கிடக்கும் அவலம் ஏற்பட்டுள்ளது.

அதனால் உடல்களை ஒரே இடத்தில் வைத்து உறவினர்கள் முன்பு தகனம் செய்யும் நிலைமையும் ஏற்பட்டுள்ளது. டெல்லியைச் சேர்ந்த நிதிஷ்குமாரின் தாய் கொரோனாவால் உயிரிழந்த பின்பு அவரின் உடலை தகனம் செய்ய இடமில்லாமல் 2 நாட்களாக தனது தாயின் சடலத்தை வீட்டிலேயே வைத்திருந்த சம்பவம் நெஞ்சை உலுக்கியது. இதே போல் மேலும் சில இடங்களிலும் நடப்பதாக தகவல்கள்  வெளியாகியுள்ளன. ஆனால் அங்குள்ள அதிகாரிகள் இதை மறுப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

Categories

Tech |