மறைந்த விவேக்கின் அஸ்திக்கு மேல் அவரது உறவினர்கள் மரக்கன்றுகளை நட்டுள்ளனர்.
தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகராக வலம் வந்தவர் நடிகர் விவேக். சமீபத்தில் நிகழ்ந்த இவரது மறைவு திரையுலகில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. தாய் இதை தொடர்ந்து ரசிகர்களும், திரை பிரபலங்களும் விவேக்கின் மறைவிற்கு தங்களை இரங்கலை தெரிவித்து வந்தனர்.அவரின் நினைவாக பல ரசிகர்களும், திரை பிரபலங்களும் மரக்கன்றுகளை நட்டு வைத்தனர்.
இந்நிலையில் மறைந்த நடிகர் விவேக்கின் அஸ்தி அவருடைய சொந்த ஊரான சங்கரன்கோவில் அருகே உள்ள பெருங்கோட்டூர் கிராமத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. விவேக்கின் உறவினர்கள் அந்த அஸ்திக்கு மரியாதை செலுத்தி குழிதோண்டி புதைத்த பின் அதற்குமேல் மலர்களை தூவி விவேக்கின் நினைவாக மரக்கன்றுகளை நட்டனர். மேலும் அவர்கள் விவேக்கின் நினைவாக இதை நட்டுள்ளோம் என்று நெகிழ்ச்சியுடன் கூறிய சம்பவம் காண்போரை கண்கலங்க வைத்துள்ளது.