நம் அன்றாட வாழ்வில் உணவு என்பது மிகவும் இன்றியமையாதது. அவ்வாறு நாம் தினமும் எடுத்துக்கொள்ளும் உணவுகள் உடலுக்கு ஆரோக்கியம் தரும் அதிக அளவு சத்துக்கள் நிறைந்த உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும். அதிலும் குறிப்பாக காய்கறிகள், கீரைகள் மற்றும் பழங்களை உணவில் சேர்த்துக் கொள்வது மிகவும் நல்லது. ஏனென்றால் அதில் இயற்கையாகவே அதிக அளவு சத்துக்கள் நிறைந்துள்ளன.
ஆனால் சிலருக்கு அடிக்கடி அஜீரண கோளாறு ஏற்படுவதை மிகப்பெரிய பிரச்சனையாக உள்ளது. அதற்கு எளிய வீட்டு மருத்துவம் நீங்களே செய்யலாம். மாம்பழம் அதிகம் சாப்பிட அஜீரணம் ஏற்பட்டால் பால் சாப்பிட வேண்டும். நெய் சாப்பிட்டால் அஜீரணம் என்றால் எலுமிச்சை சாறு பருகவேண்டும். பால் சாப்பிட்டு அஜீரணம் என்றால் வாழைப்பழம் சாப்பிட வேண்டும். தேங்காய் ஆல் அஜீரணம் என்றால் அரிசியை சிறிது மென்று தின்றால் சரியாகும். பருப்பின் ஆல் அஜீரணம் என்றால் சிறிது சர்க்கரை சாப்பிட வேண்டும்.