பாக்கியலட்சுமி சீரியல் நடிகர் சதீஷ் லைவ்வில் ரசிகர்களுடன் வேதனையுடன் பேசியுள்ளார்.
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் பாக்கியலட்சுமி சீரியலுக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இந்த சீரியலில் நடிகை சுசித்ரா பாக்கியலட்சுமி கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் . குடும்பத்திற்காக உழைக்கும் பாக்கியலட்சுமி ஒரு கட்டத்தில் தனக்கான அடையாளத்தை எப்படி தேடிக் கொள்கிறார் என்பதுதான் இந்த கதையின் திருப்பம் . இதனால் இந்த சீரியல் குடும்பத் தலைவிகளை வெகுவாக கவர்ந்துள்ளது . கடந்த சில வாரங்களாக இந்த சீரியலில் பாக்கியலட்சுமியின் இரண்டாவது மகன் எழில் தனது தந்தைக்கு இருக்கும் ரகசிய உறவை கண்டுபிடித்தது தான் சுவாரஸ்யமாக செல்கிறது .
இந்த சீரியலில் பாக்கியலட்சுமியின் கணவராக சதீஷ் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் சதீஷ் சமீபத்தில் லைவ்வில் தனது ரசிகர்களுடன் உரையாடியுள்ளார். அப்போது பேசிய சதீஷ் ‘கடந்த சில நாட்களாக பாக்கியலட்சுமி சீரியல் புரோமோவை பார்த்துவிட்டு பலரும் எனது சமூக வலைதளப் பக்கத்தில் மோசமான வார்த்தைகளால் திட்டி கமெண்ட் செய்கின்றனர். இது ஒரு சீரியல் என்பதை மறக்க வேண்டாம் . என்னிடம் வந்து மோசமாக பேசுவது எப்படி நியாயமாகும் . தயவு செய்து புரிந்து கொள்ளுங்கள்’ என வேதனையுடன் கூறியுள்ளார்.