Categories
உலக செய்திகள்

உடல்நலம் சரியில்லாத மகனை கொன்ற இரக்கமற்ற தாய்.. ஏமாற்றமடைந்த தந்தை கதறல்..!!

ஸ்காட்லாந்தில் பெற்ற தாயே தன் மகனை உடல்நிலை சரியில்லாத காரணத்தால் கொலை செய்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  

ஸ்காட்லாந்தில் உள்ள Fife என்ற பகுதியில் வசிக்கும் 3 வயது சிறுவன் Mikaeel Kular திடீரென்று காணாமல் போயுள்ளார். இதனால் உள்ளூர்வாசிகள் ஆயிரக்கணக்கானோர் மற்றும் காவல்துறையினர் சிறுவனை தேடும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். அதன் பிறகு kirkcaldy என்ற இடத்தில் இருக்கும் ஒரு குடியிருப்பின் பின்புறம் சூட்கேஸ் ஒன்றில் சிறுவனின் உடல் தான் மீட்கப்பட்டுள்ளது.

அதாவது சிறுவனின் தாயான Rosdeep Adekoya என்பவரின் சகோதரியுடைய வீடுதான் அது. இதனைத்தொடர்ந்து காவல்துறையினர், அந்த குழந்தையின் உடல் முழுக்க 40 காயங்கள் இருந்ததாக தெரிவித்துள்ளனர் இதனால் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வந்தது. இதில் குழந்தையின் தாய் Rosdeep, தான் அடித்த போது எதிர்பாராத விதமாக குழந்தை உயிரிழந்ததாகவும் அதனை கண்டு தான் அதிர்ந்து போனதாகவும் தெரிவித்துள்ளார்.

அதன்பிறகு தான் உண்மை வெளிவந்துள்ளது. அதாவது அந்த சிறுவன் உடல்நலக் குறைவுடன் இருந்ததால் தாயே, குழந்தையை அடித்து கொலை செய்துவிட்டு நாடகம் ஆடியுள்ளார். இதனால் அவருக்கு 11 வருடங்கள் சிறை தண்டனை விதிக்கப்பட்டிருந்தது. எனினும் தண்டனை காலம் முடிவதற்கு கு முன்பாகவே அவர் விடுதலை செய்யப்பட்டார்.

இந்த செய்தியை இணையதளங்கள் மூலமாக சிறுவனின் தந்தை Zahid Saeed அறிந்தவுடன் ஏமாற்றம் அடைந்ததாக தெரிவித்திருக்கிறார். மேலும் அவர் விடுதலை செய்யப்படும் முன்பு தகவல் தனக்கு அளிக்குமாறு ஏற்கனவே தெரிவித்திருந்தேன். எனினும் இணையதளங்கள் மூலமாக தான் அவர் விடுதலையானதை அறிய வேண்டிய நிலை ஏற்பட்டு தான் கடும் கோபமடைந்ததாக தெரிவித்திருக்கிறார்.

மேலும் அவர் தன்மகனுக்கு நேர்ந்த அநியாயத்தை சட்டமும் கேட்கவில்லை. மேலும் நீதி எங்கள் இருவரையுமே கைவிட்டுவிட்டது. சட்டத்தில் மாற்றங்கள் செய்யப்பட வேண்டும் என்று தெரிவித்திருக்கிறார்.

Categories

Tech |