Categories
கிரிக்கெட் விளையாட்டு

டி20 போட்டியில் விராட் கோலியின் …! சாதனையை முறியடித்த பாபர் அசாம்…!!!

ஜிம்பாப்வேக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் அணியின் கேப்டன்  பாபர் அசாம் அரைசதம் அடித்து, சாதனை படைத்துள்ளார்  .

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின்  கேப்டனான  பாபர் அசாம், அனைத்துப் போட்டிகளிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார் . நேற்று நடைபெற்ற ஜிம்பாப்வே – பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான ,3வது  டி20 போட்டியில்,  பாபர் அசாம் அரை சதம் எடுத்து  அசத்தினார். இந்தப் போட்டியானது அவருக்கு 52 வது டி20  இன்னிங்ஸ் ஆகும்.

எனவே டி20 போட்டிகளில் அதிவேகமாக ,2000 ரன்களை கடந்த வீரர் ,என்ற சாதனையை பாபர் அசாம் படைத்துள்ளார். இதுவரை  இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி 56 இன்னிங்ஸில், 2000 ரன்களை அடித்து முதலிடத்தில் இருந்தார். நேற்றைய போட்டியில் மூலமாக, பாபர் அசாம் முதல் இடத்தை கைப்பற்றியுள்ளார்.

Categories

Tech |