Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

முழுநேர ஊரடங்கு…. அத்தியாவசியமற்ற கடைகள் அடைப்பு…. வெறிச்சோடி காணப்பட்ட சாலைகள்….!!

முழு நேர ஊரடங்கால் சாலைகள் மக்கள் நடமாட்டமின்றி வாகனப் போக்குவரத்து இன்றி வெறிச்சோடி காணப்பட்டது.

தமிழகத்தில் கொரோனாவின் இரண்டாவது அலை வேகமாக பரவிக் கொண்டிருக்கும் நிலையில் ஞாயிற்றுகிழமை முழு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. தஞ்சை மாவட்டத்தில் இரவு 10 மணிக்கு மேல் பொது மக்கள் நடமாட்டம் குறைந்து வெறிச்சோடி காணப்பட்டது. தஞ்சை, கும்பகோணம், ஒரத்தநாடு, மதுக்கூர், பட்டுக்கோட்டை, பேராவூரணி, பூதலூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களிலும் பரபரப்பாக காணப்படும் இடங்கள் ஊரடங்கால் மக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடி காணப்பட்டது.

மேலும் மருந்துக்கடைகள், ஆம்புலன்ஸ் சேவைகள், போலீஸ் வாகனங்கள் மட்டுமே சாலையில் இயங்கின. மேலும் அத்தியாவசிய தேவை மற்றும் மருத்துவமனைக்கு செல்பவர்கள் மட்டுமே அடையாள அட்டையை காண்பித்த பின்னரே சாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் சிலர் நடைபயிற்சிக்கு கூட வராமல் வீட்டில் மொட்டை மாடியிலேயே நடைபயிற்சியை மேற்கொண்டுள்ளனர். இதனையடுத்து ஹோட்டல்களில் பார்சல்கள் மட்டுமே வழங்கப்பட்டது. மேலும் தொடர்ந்து போலீசார் ஆங்காங்கே நின்றபடி கண்காணித்து கொண்டிருந்தனர்.

Categories

Tech |