தென்காசியில் அனுமதி இல்லாமல் செம்மண் ஏற்றி வந்த லாரி டிரைவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
தென்காசி மாவட்டத்திலுள்ள மேல மாதாபுரத்தில் இருந்து ராமநதி அணைக்கு செல்லும் வழியில் செம்மண் கடத்தி வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில் அவ்வழியாக வரும் அனைத்து வாகனங்களையும் நிறுத்தி போலீசார் சோதனை செய்து வந்துள்ளனர்.
அப்போது அவ்வழியாக வந்து கொண்டிருந்த லாரியை போலீசார் நிறுத்தி சோதனை செய்து உள்ளனர். அந்த சோதனையில் லாரியில் செம்மண் கடத்தி சென்றது தெரியவந்துள்ளது. இதனால் உடனடியாக போலீசார் அந்த லாரியை பறிமுதல் செய்து டிரைவர் தங்கராஜ் கைது செய்துள்ளனர். மேலும் இந்த கடத்தலுக்கு தொடர்பான ஜே.சி.பி உரிமையாளர் தாவீது ரூபன் மற்றும் ஜே.சி.பி டிரைவர் சாமி ஆகியோரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.