Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

போலீசுக்கு வந்த தகவல்… ரோந்து பணியில் சிக்கிய முதியவர்… அதிரடி நடவடிக்கையால் கைது..!!

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே சட்டவிரோதமாக மது விற்பனையில் ஈடுபட்ட முதியவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

தமிழகம் முழுவதும் கொரோனா தொற்று இரண்டாவது அலை வேகமாக பரவி வருவதால் நேற்று முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இந்த நிலையில் திருப்பத்தூர் தென்மாபட்டி பகுதியில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்யப்படுவதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. அந்த தகவலின் பேரில் திருப்பத்தூர் நகர் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அப்போது அங்கு உள்ள ஒரு தியேட்டர் பகுதியில் நாராயணன் (65) என்பவர் சட்டவிரோதமாக மது விற்பனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். இதையடுத்து அவரை கையும் களவுமாக பிடித்த காவல்துறையினர் அவரை கைது செய்தனர். மேலும் அவரிடமிருந்த 45 மதுபாட்டில்களையும் காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.

Categories

Tech |