மதுரையில் இருந்து துபாய்க்கு இயக்கப்படும் விமானங்கள் பத்து நாட்களுக்கு ரத்து செய்யப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
தமிழகத்தில் கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்துக் கொண்டு வருகின்றது. இதன் காரணமாக தமிழகத்தில் பல்வேறு கட்டுப்பாடுகளை தமிழக அரசு கொண்டு வந்துள்ளது. இரவு நேர ஊரடங்கு, ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு, இதைத் தொடர்ந்து இன்று முதல் பல கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்துள்ளன.
இந்நிலையில் மதுரையில் இருந்து துபாய்க்கு இயக்கப்பட்டு வந்த விமானம் 10 நாட்களுக்கு ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. துபாயில் இருந்து இந்தியர்களை அழைத்து வருவதற்காக வாரத்தில் 6 நாட்கள் விமானம் இயக்கப்பட்டு வந்த நிலையில், கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் அடுத்த பத்து நாட்களுக்கு மதுரையில் இருந்து துபாய்க்கு செல்லும் விமானங்கள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.