Categories
மாநில செய்திகள்

BREAKING: ஸ்டெர்லைட்டை திறக்க அனுமதி…. தமிழகத்தில் பெரும் பரபரப்பு….!!!!

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து கொண்டே வருவதால் இரவு நேர ஊரடங்கு உள்ளிட்ட பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அதுமட்டுமன்றி தடுப்பூசி போடும் பணியும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் குரோனா பரவலை கட்டுப்படுத்துவது தொடர்பாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று சென்னை தலைமைச் செயலகத்தில் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடத்த அழைப்பு விடுத்திருந்தார்.

அதன்படி இன்று சென்னை தலைமைச் செயலகத்தில் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடந்தது. அந்தக் கூட்டத்தில் ஆக்சிஜன் உற்பத்திக்கு ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதிக்கலாம் என திமுக, கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் காங்கிரஸ் உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகள் மற்றும் பாஜக ஒப்புதல் அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதி குறித்து சற்று நேரத்தில் அறிவிப்பு வெளியாக வாய்ப்பு உள்ளது. இந்த கூட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி, மதிமுக, அமமுகவுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை.

Categories

Tech |