எதிர்பாராதவிதமாக கிணற்றில் மூழ்கி பள்ளி மாணவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தர்மபுரி மாவட்டத்தில் உள்ள எம்.ஜி.ஆர் நகர் பகுதியில் கோவிந்தராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மனோஜ் என்ற பதினொன்றாம் வகுப்பு படிக்கும் மகன் இருந்துள்ளார். இந்நிலையில் அப்பகுதியில் உள்ள ஒரு கிணற்றில் குளிப்பதற்காக மனோஜ் தனது நண்பர்களுடன் சென்றுள்ளான். இந்நிலையில் குளித்துக் கொண்டிருக்கும்போது திடீரென மனோஜ் கிணற்றில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்து விட்டார்.
இதுகுறித்து உடனடியாக தர்மபுரி தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் மனோஜின் உடலை கைப்பற்றி தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த தர்மபுரி டவுன் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.